22 Jan 2018
ஜனவரி 22, 2018 – பிடதி, பெங்களூரு
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு மற்றுமொரு வெற்றி!!!
பரமஹம்ஸ நித்யானந்தருக்கு எதிராக சதி செய்து, அவர் மீது பொய் வழக்கு தொடுத்தவனும், தொடர் கற்பழிப்பு குற்றங்கள் செய்தவனுமான லெனின் கருப்பனுக்கு, கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவனுக்கு எதிரான வழக்கில் அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடித்து குற்ற அறிக்கையை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லெனின் கருப்பனுக்கு அழைப்பானை பிறப்பித்தும் கனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“கற்பழிக்க முயற்சி செய்தல், மிரட்டி பணம் பரித்தல், கொலை மிரட்டல்” போன்ற குற்றங்களில் ஈடுபட்ட லெனின் கருப்பன் மீது செல்வி.புஷ்பா அவர்கள் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய, கடந்த மார்ச், 2013ல் கனம் கர்நாடக உயர் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 11, 2013 அன்று பிடதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) – Cr. N. 0077/2013 என்ற எண்ணில் காவல்துறையினரால் பதியப்ப்பட்டது. அந்த புகாரின் மீது சட்டப்படியான மேல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கனம் உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது
Case of rape registered against Lenin Karuppan after directions from Hon’ble High Court of Karnataka
இந்த குற்றவழக்கு தொடர்பாக கனம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள உத்தரவில், “இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code) – இன் பிரிவிகள் 376(கற்பழித்தல்), பிரிவு 341(தவறாக நோக்கத்திற்கு அடைத்துவைத்தல்), பிரிவு 506(கொலை மிரட்டல் விடுத்தல்), பிரிவு 504(பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கோடு வேண்டுமென்றே அவமதித்தல்), மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம் SC ST Act பிரிவு 3(1)(r) அதாவது (தாழ்த்தப்பட்ட/பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கில் பொது இடத்தில் சாதியை குறிப்பிட்டு அவமதித்தல்) –ஆகிய பிரிவுகளின்படி பல குற்றங்கள் நடந்துள்ளதை கனம் நீதிமன்றத்தார் ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரனையை முடித்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டம் SC ST Act இன் கீழ் வரும் கடுமையான வழக்கு என்பதால், இவ்வழக்கை 2 மாதங்களுக்குள் முடித்துவைக்கப்பட வேண்டும்.
லெனின் கருப்பன் மற்றும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, நித்யானந்தர் ஒரு நடிகையோடு இருப்பது போன்ற ஒரு சர்ச்சைக்குரிய போலி வீடியோவை தயாரித்து, அதனை ஊடகங்களின் மூலமாக ஒளிபரப்பி, தீவிரமாக தொடர்ந்து பல அவதூறுகள் செய்தும், அதன் மூலம் கடந்த 2010ம் ஆண்டு பரமஹஸர் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு சாதகமாக, இந்தியாவில் உள்ள் பல்வேறு நீதிமன்றங்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பல சிறப்பான தீர்ப்புகளோடு, கனம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இப்பொழுது வழங்கியுள்ள இந்த உத்தரவு மேலும் சிறப்பித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சமூக விரோதிகள் தங்கள் சுயநலனுக்காக பரமஹம்ஸர் மீது தொடுத்த வழக்கை கனம் கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
பரமஹம்ஸருக்கு சாதகமாக உள்ள அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிகுமாறு சில மாதங்களுக்கு முன், கனம் கர்நாடக நீதிமன்றம் வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேதகு கனம் உச்ச நீதிமன்றமும் அந்த முக்கிய உத்தரவை உறுதி செய்து வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உறுதியான ஆதாரம் மற்றும் ஆவணம் விசாரணை அதிகாரிகளால் மறைக்கப்பட்டாலும், நீதிமன்றம் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவை வழக்கின் அங்கம் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியுள்ளது.
நீதிமன்றத்தாரிடமிருந்து மறைக்கப்பட்ட இந்த ஆவணங்களில் தெரியவருவது;
.
பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களுக்கு எதிராக “மிரட்டுதல், அச்சுறுத்தி பணம் பறித்தல், சதிச்செயல்கள் புரிதல், பெண்களை தவறான முறையில் சித்தரித்தல்” போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டதால் லெனின் மற்றும் ஆரத்தி ராவ் மீது சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற உத்தரவின் நகல் கீழே இனைக்கப்பட்டுள்ளது.
Below is the order.
Related news:
https://backup.nithyanandatruth.org/2017/12/20/ramnagara-civil-court-issues-summons-samaya-news/
https://backup.nithyanandatruth.org/2017/09/07/my-ex-husband-planned-the-attack-against-nithyananda/