கலிபோர்னியா – அமெரிக்கா
டிசம்பர் 9, 2017
பரமஹம்ஸ நித்யானந்தர் வழக்கில் அவருக்கு எதிராக பொய் சாட்சி சொன்ன வினய் பரத்வாஜ் அமெரிக்காவில் குழந்தையை பாலியல் கொடுமை செய்த காரணத்திற்காக, கற்பழித்த குற்றத்திற்காகவும், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவன் மீது அந்த குழந்தையால் வழக்கு பதியப்பட்டு, விசாரணை முடிந்து, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தால் அவனுக்கு 4 ¾ ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் கர்நாடகாவில் இருந்து உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியான சமயா தொலைக்காட்சி, “வினய் பரத்வாஜ்” “குற்றமற்றவர் – நிரபராதி” என்று கூறி பொய்யான செய்திகளை ஒளிபரப்பியது.
இவ்வாறு பொது தளத்தில், தொலைக்காட்சியில் “தவறான மற்றும் பொய்யான செய்திகளை”, உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்வது கடுமையான நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். இது குற்றச்செயலாகும்.
அதுமட்டுமல்லாமல் பரமஹம்ஸ நித்யானந்தருக்கு எதிராக தவறான நோக்கத்தோடு, தவறாக உந்தப்பட்டு, கொச்சைபடுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும், பொய்யான அவதூறுகளை சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செய்தது.
சட்டத்திற்கு புறம்பாக கடந்த டிசம்பர் 8, 2017 அன்று, கன்னட தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை செய்தி-ஆசிரியர்கள் ரங்கனாத் பரத்வாஜ் மற்றும் கலாவதி பரத்வாஜ் பரமஹம்ஸ நித்யானந்தருக்கு எதிராக அவதூறு பரப்புதல் மற்றும் சதிச்செயலில் ஈடுபட்டனர்.
இந்த கடுமையான நீதிமன்ற அவமதிப்பு செயலை, கவனத்தில் எடுத்துக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், சமயா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கநாத் பரத்வாஜ், மற்றும் நிழச்சியின் பங்கேற்பாளர் கலாவதி பரத்வாஜ் இருவருக்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து, அபராதம் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Life Bliss Foundation தொடுத்த வழக்கு:
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தவறான உள்நோக்கத்தோடு பரமஹம்ஸ நித்யானந்தருக்கு எதிராக அவதூறான செய்திகள் ஒளிபரப்பப்பட்ட பிறகு Life Bliss Foundation சமயா தொலைக்காட்சி மீது வழக்கு தொடுத்தது.
தொடுக்கப்பட்ட இவ்வழக்கின் விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் உள்ளன;
(The case of Life Bliss Foundation v Samaya TV, RSM Broadcasters Private Limited, Ranganath Bharadwaj and AV Kalavathi Bharadwaj (Case No: CIVRS 1410615 filed in the Superior Court of California, County of San Bernardino))
இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 8, 2017 அன்று வழங்கப்பட்டது.
ரங்கனாத் பரத்வாஜ் மற்றும் கலாவதி பரத்வாஜ் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமாகி, அவர்கள் குற்றவாளிகள் என்று அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது. பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்களை பற்றியும் அமெரிக்காவில் உள்ள அவரது இயக்கத்தை பற்றியும் பொய்யான செய்திகளை ஒளிபரப்பியதற்காக, சமயா தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர்கள் “ரங்கனாத் பரத்வாஜ்” மற்றும் “கலாவதி பரத்வாஜ்” இருவருக்கும் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.322415000.00 அதாவது முப்பத்து இரண்டு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதித்தது.
குறிப்பு:
வினய் பரத்வாஜ் – யார் இவர்?
குழந்தையை பாலியல் கொடுமை செய்த கற்பழித்தது போன்ற அதிர்ச்சியளிக்க கூடிய கொடுங் குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்டு, அவைகள் நிரூபிக்கப்பட்டு, சிறைதண்டனை அனுபவித்து வந்த வினய் பரத்வாஜ், பின்னர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர் ஆவார்.
பரமஹம்ஸ நித்யானந்தர் மீது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு குற்றச்சாட்டு சுமத்திய வழக்கின் பொய் சாட்சியான வினய் பரத்வாஜுக்கு, மைசூரு முதன்மை முதுனிலை உரிமையியல் நடுவர் மற்றும் முதன்மை நீதிமன்ற நடுவர் அவர்கள் அக்டோபர் 16, 2017 அன்று, 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூபாய் 2,74,94,447.50/-) அதாவது இரண்டு கோடியே எழுபத்தி நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த வழக்கிலிருந்தும் வினய் பரத்வாஜ் தப்பித்து தலைமறைவாக இருந்து வருகிறார்.